மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் அதிகரித்து 59,330 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி136 புள்ளிகள் அதிகரித்து 17,713 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. மத்திய பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், தற்போது இந்திய பங்குசந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…