ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை விதித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு விசாரணையை ஜூலை 10க்கு ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்த போது, ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இன்று வரை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று ப.சிதம்பரம் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜூலை 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…