BREAKING NEWS:பெட்ரோல் விலை ரூ.4 உயர்வு,டீசல் விலை ரூ.3.50 உயர்வு!

Default Image

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக தேர்தலால் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாததால் ஒரே நேரத்தில் உயர்த்த வாய்ப்பு உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல்  டெல்லியில் மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தினமும் டீசல் விலை உயர்த்தப்படுவதால் லாரி தொழில் அழிந்துவிட்டது என்று தெரிவித்தனர்.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (இன்று மே-17 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.78.16 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.70.49 காசுகளாகவும் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்