ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நாளை விசாரணை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதி வழங்கியதற்குக் கைம்மாறாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு மூன்றரைக் கோடி ரூபாய் பணம் செலுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் விசாரணைக்காக நாளை ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜூன் ஐந்தாம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.
அதுவரை ப.சிதம்பரத்தைக் கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்தது. ஜூன் ஐந்தாம் தேதிக்குள் அமலாக்கத்துறையிடம் ஆஜராகுமாறும் ப.சிதம்பரத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதேபோல் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நாளை விசாரணை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…