#Breaking : மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி..!
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது.
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, அதிகரிப்பு மற்றும், அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819% சதவீதம் அதிக லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து அதானி நிறுவன பங்குகள் மீது முறைகேடு புகார்கள் எழுந்தது.
அதானி நிறுவனம் மீது பங்கு முறைகேடு புகார்கள் எழுந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணும் 17,600 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. அதானி குழும பங்குகளின் விலை மட்டும் 20 விழுக்காடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1000 புள்ளிகள் அல்லது 1.63% என குறைந்து 59,225 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 313 புள்ளிகள் அல்லது 1.75% குறைந்து 17,573 ஆகவும் இருந்து வருகிறது.