கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடனே வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் சென்ற வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றமடைந்து வர்த்தகத்தைத் தொடங்கியது.
இது முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அளித்தது. ஏனென்றால்சென்செக்ஸ் 525.75 புள்ளிகள் உயர்ந்து 64,117.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 140.05 புள்ளிகள் உயர்ந்து 19,129.20 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. இதன் தொடர்ச்சியாக இன்றைய வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் பங்குச்சந்தை கேட்டதுடன் வர்த்தகமாகி வருகிறது.
வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிவடைந்ததாக கூறப்பட்டாலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 64,835.23 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 381.02 புள்ளிகள் உயர்ந்து, 64,740.55 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 104.50 புள்ளிகள் உயர்ந்து 19,335.10 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 64,363.78 புள்ளிகளாவும், நிஃப்டி 19,230.60 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.38 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 85.28 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 52.00 அல்லது 0.78% குறைந்து ரூ.6,748 ஆக விற்பனையாகி வருகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 3 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளது. ஆக்சிஸ் பேங்க், லார்சன் & டூப்ரோ, நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. மாருதி சுசுகி இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…