சிறு, குறு தொழில்கள் நலிவுற்றது !பணமதிப்பிளப்பு காரணமாக…
மத்திய அரசு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த ஓர் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான குறு,சிறு தொழில்கள் நலிவுற்று ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் சுற்று வட்டாரத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுகள் மகாராஷ்ட்ரா, குஜராத் பிஹார், ஆந்திரா,கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யபப்டுகிறது.
இதனால் கடந்த 30 ஆண்டுகளாக வெள்ளி உற்பத்தியாளர்களும் வெள்ளி தொழிலாளர்களும் நல்ல நிலையில் உள்ளன. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த ஓர் ஆண்டாக சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் தொழில் படிப்படியாக நலிவடைந்து தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இதில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சிறு ,குறு,தொழில்கள் பாதிக்கபட்டுள்ளது.