பங்கு சந்தை வரலாறு காணாத வளர்ச்சி : உச்சத்துல பங்குசந்தை
தொழில் புரிவதற்கு சாதகமான சூழல் உள்ள நாடுகளின் பட்டியலானது உலக வங்கியால் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். இதனால் நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தைத் தொட்டன.
நேற்றய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 387 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்செக்ஸ் 33600 புள்ளியில் முடிவடைந்தது.
இதற்கு முன் சென்செக்ஸ் 33266 புள்ளிகளில் முடிவடைந்தது அதிகபட்சமாக இருந்தது. அதேபோல் நிப்டியும் 105 புள்ளிகள் உயர்ந்து 10440 புள்ளியில் முடிவடைந்ததுள்ளது. இதற்கு முன் 10384 புள்ளிகளில் நிப்டி நிறைவடைந்ததே அதிகபட்சமாகும்.
துறைவாரியாக பார்த்தால் ரியால்டி குறியீடு 2.93 சதவீதம் உயர்ந்தது இதுவே அதிகபட்சமாகும். அதனைத் தொடர்ந்து வங்கி, உலோகம், எப்எம்சிஜி உள்ளிட்ட குறியீடுகள் அதிகபட்சமாக உயர்ந்துள்ளன. இதற்க்கு நேர்மாறாக கன்ஸ்யூமர் டியுரபிள், ஆட்டோ மற்றும் ஹெல்த்கேர் மற்றும் மின்சார குறியீடுகள் போன்றவை சரிந்து முடிந்துள்ளது.
ஏர்டெல் 8% உயர்வு
கடந்த ஆறு காலாண்டுகளாக நிறுவனத்தின் செயல்பாடுகள் மோசமாக இருந்தது. இருந்தாலும் ஏர்டெல் நிறுவன பங்கு நேற்று அதிகபட்சமாக 9.41 சதவீதம் உயர்ந்ததுள்ளது. வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.16,290 கோடியாக உயர்ந்திருக்கிறது. இப்போது இன்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பானது ரூ.2.15 லட்சம் கோடியாக உள்ளது.