ஓ என் ஜி சி நிறுவன லாபம் கணித்ததை விட அதிகம் : பங்கு விலையிலும் ஏற்றம்
நடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,131 கோடியாக இருக்கிறது.
கடந்த நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபமானது ரூ.4,975 கோடியாக இருந்தது.
வெளிநாட்டு சந்தை கணிப்பு நிறுவனமான நொமுரா, ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,070 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என்று கணித்திருந்தது. ஆனால் கணிதத்தை விட நேற்று வெளியான காலாண்டு முடிவில் நிறுவனத்தின் லாபம் கணிசமாக அதிகரித்து ஆச்சரியத்தை எற்படுதியுள்ளது.
ஜூலை – செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.18,966 கோடியாக அதிகரித்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு 1.69 சதவீதம் அதிகரித்துள்ளது இதனால் ரூ.186.65 என்ற விலையில் உள்ளது.