வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு ஒரு இன்பச்செய்தி
தற்போது உலகில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலியாக உருவெடுத்து வருகிறது WHATSAPP. இந்நிறுவனம் அவ்வபோது தனது செயலியை புதுபித்து கொண்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக தனது செயலியில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி நாம் அனுப்பும் செய்திகள் தவறாக மாற்றி அனுப்பி விட்டால் அதனை கண்டு பயப்பட தேவை இல்லை
ஏனென்றால் இனி அப்படி தவறுதலாக அனுப்பப்பட்ட தகவல்களை 7 நிமிடத்துக்குள் அழித்துவிடலாம், இது அந்த செய்தியை அனுப்பியவர் பெற்றவர் என இருவருக்கும் அந்த செய்தி அழிந்துவிடும். அந்த நீக்கு வசதி சீக்கிரம் உங்கள் WHATSAPP-க்கு வந்து விடும்
இந்த WHATSAPP செயலியை உலகில் தினமும் 1பில்லியன் பயனர்கள் உபயோக படுத்துகிறார்கள். இதன் மூலம் பல குறுந்தகவல்கள், GIF, விடியோ, DOCUMENTS, கதை ஆகியவை WHATSAPP மூலம் பகிரபடுகிறது.