வெடிக்கும் ஊழல் ..!சிக்கலில் பாஜக ..!A முதல் Z வரை பாஜகவின் ஊழல் பட்டியல்..!இணையதளத்தை வெளியிட்ட காங்கிரஸ்
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான குறுகிய காலத்தில் பிரான்சின் டசால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனங்கள் இந்த விமான உற்பத்தியில் இணைந்து செயல்பட போவதாக அறிவித்தது.இது இந்திய அரசியலில் மத்திய அரசின் மீது சர்சையை கிளப்பியது.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரபேல் ரக போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்திருப்பது தெளிவாக தெரிகிறது என்கிறார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக பிரான்சின் முன்னாள் அதிபர் பிரான்சுவா ஹாலண்டே ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்துஇருந்தது. அவரது பேட்டியில், “ரபேல் போர் விமான தயாரிப்புக்காக டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது, வேறு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை” என கூறியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம்செய்தி வெளியிட்டது.
காங்கிரஸ் மட்டும் அல்லது பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் தங்களது குரல்களை எழுப்பி வருகின்றது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினை மட்டும் அல்லது பாஜக செய்த அனைத்து ஊழல்கள் என்று ஒரு இணையதள பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.இந்த இணையதளத்தில் பாஜகவின் A-Z ஊழல் என்று ஊழல் பட்டியல் உள்ளது.அதில் குறிப்பாக ரபேல் ஊழல்,வங்கிக்கடன் மோசடியில் சிக்கிய நீரவ் மோடி என பல ஊழல்கள் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
A முதல் Z வரை பாஜகவின் ஊழல் பட்டியல் ????????????https://t.co/NBaNnYUI4y இந்த இணைய தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். https://t.co/0SiBKKhNIx
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 25, 2018