முதல் முறையாக 70,000 டாலரை தாண்டிய பிட்காயின் சாதனை!
Bitcoin : உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான (டிஜிட்டல் நாணயம்) பிட்காயின் மதிப்பு சர்வதேச சந்தையில் முதல் முறையாக 70,000 டாலரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் பிட்காயினின் மதிப்பு 66,800 டாலராக இருந்த நிலையில், தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதன் மதிப்பு அதிகரித்துள்ளது.
Read More – TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!
புதிய அமெரிக்க ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் கிரிப்டோ தயாரிப்புகளுக்கான முதலீட்டாளர்களின் தேவை மற்றும் உலகளாவிய வட்டி விகிதங்கள் குறைவால் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில், பிட்காயினின் மதிப்பு 70,105 டாலராக உயர்ந்தது, பின்னர் கடைசியாக 68,317.72 இல் வர்த்தகம் செய்யப்பட்டது.
Read More – Gold Price : 4-வது நாளாக குறையாமல் எகிறும் தங்கம் விலை ..! இன்றைய (10.03. 2024) நிலவரம் என்ன ..?
பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5.87% உயர்வை கண்டுள்ளது. கடந்த மாதம், பிட்காயினின் சந்தை மூலதனம் நவம்பர் 2021க்குப் பிறகு முதல் முறையாக 1 டிரில்லியன் (1.25) டாலர் மதிப்பைத் தாண்டியது. இந்த ஆண்டு இதுவரை, பிட்காயின் விலை 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
Read More – Petrol Diesel Price : இன்றைக்கும் (09-03-2024) அதே விலையில் நீடிக்கும் பெட்ரோல் விலை ..!
அதுமட்டுமில்லாமல், கடந்த ஓராண்டில் பிட்காயின் 200% லாபபத்தை அளித்துள்ளது. இது டிஜிட்டல் நாணயத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக டிஜிட்டல் நாணயங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. இதுபோன்று மற்றொரு கிரிப்டோ கரன்சியான எதீரியத்தின் மதிப்பும் கணிசமாக உயர்ந்து, இந்த ஆண்டில் மட்டும் 65% லாபம் தந்திருக்கிறது.