முதல் முறையாக 50,000 டாலர் உயர்ந்த பிட்காயின்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக பிட்காயின் மதிப்பு சந்தையில் 50,000 டாலராக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் உலகில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதில், கிரிப்டோகரன்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பிட்காயின் என்ற மெய் நிகர் கரன்சி வெகுவாக கவர்ந்து வருகிறது. இது முற்றிலும் ஒரு மின்னணு முறையிலான பரிவர்த்தனையாகும்.
இதனால், இந்த காயினின் மார்க்கெட் மதிப்பும் வர வர உயர்ந்துகொண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், பிட்காயின் மதிப்பு 50,000 டாலரை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியின் வட்டி விகித குறைப்பு மற்றும் அதன் விலையை கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட அமெரிக்க பரிமாற்ற-வர்த்தக நிதிகளுக்கான ஒழுங்குமுறை ஒப்புதல் ஆகியவற்றின் எதிர்பார்ப்புகளால் பிட்காயின் 50,000 டாலர் அளவை எட்டியுள்ளது.
வாரத்தின் முதல் நாள்… சரிவுடன் முடிந்த இந்திய பங்குசந்தை.!
கிரிப்டோகரன்சி இந்த ஆண்டு இதுவரை 16.3% உயர்ந்துள்ளது, கடந்த 2021 டிசம்பர் மாதத்துக்கு பிறகு அதன் அதிகபட்சத்தை தொட்டுள்ளது கிரிப்டோகரன்சி. அதேசமயம் கடந்த மாதம் ஸ்பாட் ஈடிஎஃப்கள் தொடங்கப்பட்ட பிறகு 50,000 டாலர் என்பது பிட்காயினுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
மேலும், கிரிப்டோ பங்குகளும் ஏற்றத்துடன் காணப்பட்டன, கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் காயின்பேஸ் 4.9% மற்றும் கிரிப்டோ மைனர்கள் ரைட் பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் மராத்தான் டிஜிட்டல் முறையே 10.8% மற்றும் 11.9% உயர்ந்தது. MicroStrategy என்ற மென்பொருள் நிறுவனப் பங்குகள் மற்றும் பிட்காயின் வாங்குபவர் எண்ணிக்கை 10.2% உயர்ந்தது., இதுபோன்று 2வது பெரிய கிரிப்டோகரன்சியான ஈதரின் விலை 4.12% அதிகரித்து 2,607.57 டாலராக இருந்தது.