சிகெரெட், புகையிலை, குளிர்பானங்களுக்கு 35% வரி? ஜிஎஸ்டி குழுவுக்கு புதிய பரிந்துரை!  

சிகெரெட், புகையிலை, காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்கு 35% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என பீகார் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

Cigereter GST

பாட்னா : ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். அப்போது மாநிலங்கள் சார்பில் ஜிஎஸ்டி வரிகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்படும். அந்த பரிந்துரைகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து வரிகள் குறித்த பரிந்துரைகள் இறுதி செய்யப்படும்.

இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் பரிந்துரைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு அந்த வரி முறைகள் அமலுக்கு வரும்.

நேற்று (டிசம்பர் 2) பீகாரில்,  அம்மாநில துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதில் குறிப்பாக, சிகெரெட் போன்ற புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்கள் மற்றும் காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள் (பெப்சி ,  கோக் போன்ற பானங்கள்) மீது 35% வரை ஜிஎஸ்டி வரி விகிதத்தை முன்மொழிய ஆலோசனை கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. தற்போது சிகெரெட் போன்ற புகையிலை பொருட்களுக்கு 5%, 12%, 18% மற்றும் 28% என்ற வெவ்வேறு வகையில் அதன் தயாரிப்பு மற்றும் புகையிலை பொருட்கள் வகை கொண்டு வரி அமைப்பு உள்ளது. அதுபடியே இந்த புதிய வரி விதிப்பும் அந்த பொருட்களுக்கு ஏற்றாற்போல விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரெடிமேட் உடைககளில், 1,500 வரையிலான உடைகளுக்கு 5% வரியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையிலான உடைகளுக்கு 18% வரியும், ரூ.10,000 க்கு மேல் உள்ள உடைகளுக்கு 28% வரியும் விதிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதே போல, மொத்தம் 148 பொருட்களுக்கான வரி மாற்றங்கள் குறித்து பீகார் குழு முன்மொழிந்துள்ளது.

பீகார் துணை முதலமைச்சரின் இந்த அறிக்கையானது டிசம்பர் 21, 2024 அன்று நடைபெறும் GST கவுன்சிலில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். இதுகுறித்த பரிந்துரை முடிவுகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய தகவுன்சில் இறுதி செய்யும் என கூறப்பட்டுள்ளது.

அக்டோபரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பீகார் குழு பல வரி விகிதங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கியது. பாட்டில் குடிநீர் (20 லிட்டர் மற்றும் அதற்கு மேல்): ஜிஎஸ்டியை 18%லிருந்து 5% ஆகக் குறைக்க வேண்டும் எனவும், 10,000 ரூபாய்க்கும் குறைவான சைக்கிள்கள் மீதான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் எனவும்,  உடற்பயிற்சி உபகாரங்களுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆக குறைக்கவும் பரிந்துரை செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்