பி.ஃஎப் வட்டி விகிதம் உயர்வு : மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில், குறிப்பிட்ட தொகை வருங்கால வைய்ப்பு நிதியாக பிடித்தம் செய்யப்படும். இத்தொகை பணியை விட்டு செல்கையில் வட்டியுடன் அப்பணம் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இதன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.55 சதவீதமாக இருந்து வந்தது. தற்போது இந்த வட்டி விகிதம் 0.10 சதவீதம் அதிகரித்து, தற்போது 8.65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.