வங்கி சேமிப்பு நல்லதா? பங்குச் சந்தை முதலீடு நல்லதா? எது லாபம் தரும்!
டெல்லி : இந்தியாவில் மக்கள் பணத்தை வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தையில் முதலீட்டு செய்கின்றனர். எது நல்லது? லாபம் தரும்? என்று பார்க்கலாம்.
முன்பெல்லாம் பணம் கையில் இருந்தால் செலவாகிவிடும் என்று அதை வங்கியில் சேமித்து வைத்தால் எதிர்காலத்தில் நிச்சயம் உதவும் என்று சொன்ன காலம் போய், தற்பொழுது நல்ல பங்குகளா பார்த்து வாங்கு, மாதம்மாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்தது! என்று அறிவுரை சொல்லும் காலம் வந்துவிட்டது.
கடந்த ஜூலை மாதம் மும்பையில் நடைபெற்ற வங்கிகள், நிதித்துறை மற்றும் காப்பீடு உச்சி மாநாட்டில் இந்தியர்கள் மனமாற்றம் குறித்து சில விவாதங்கள் எழுந்தது. அது பற்றி பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், நீண்ட காலமாக தங்கள் சேமிப்புகளுக்காக வங்கிகளே சார்ந்திருந்த இந்திய குடும்பங்கள் இப்போது பங்கு சந்தைகள் மற்றும் நிதி சார் இடைத்தார்கள் பக்கம் அதிக அளவு செல்வதாக கூறியிருந்தார்.
பெரும்பாலான இந்திய குடும்பங்கள் வாங்கி சேமிப்புகளை தவிர்த்து விட்டு, பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்யலாம்? அதில் என்ன லாபம் இருக்கிறது? தீமை என்ன என்று பார்க்க தொடங்கியுள்ளனர். வங்கி சேமிப்பு மற்றும் பங்குச் சந்தை முதலீடு இரண்டும் ஒரு நல்ல முதலீட்டு விருப்பங்கள் தான். ஆனால் அவற்றின் பயன்கள் மற்றும் அபாயங்கள் வேறுபடுகின்றன.
வங்கி சேமிப்பு
வங்கி சேமிப்பு என்பது மிகவும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாகும். வங்கிகளில் வைப்புக் கணக்குகள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைப்பதில் மிகவும் நம்பகமானவை. வைப்புக் கணக்கில் இருந்தாலே, நீங்கள் வரம்புள்ள வட்டி விகிதத்தில் உறுதியாக வருவாய் பெற முடியும். பல வைப்புக் கணக்குகள் வட்டியை மாதம், கால் வருடம் அல்லது ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிட்டு, வருமானத்தை அதிகரிக்கின்றன.
வங்கிகள் நிர்வாகத்தின் கீழ் இருந்தால், சரியான கணக்குப் பாதுகாப்புகள் மூலம் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வங்கிகளில் கிடைக்கும் வட்டியை பொறுத்தவரை பங்குச் சந்தை முதலீடுகளுடன் ஒப்பிடும்பொழுது குறைவாக இருக்கும்.
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP)
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளால் வழங்கப்படும் ஒரு முதலீட்டு வழி, இதில் நீங்கள் ஒரு நிதி நிறுவனம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) மூலம், மாதம்மாதம் சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். இது பங்குச் சந்தையிலோ அல்லது சென்செக்ஸ், நிப்டி போன்ற வினியோகமான ஃபண்ட்களிலோ முதலீடு செய்யும் எளிய முறையாகும்.
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI- ஏஎம்எப்ஐ) என்ற அமைப்பு வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடியாக இருந்த மாதாந்திர SIP பங்களிப்பு ஜூலையில் ரூ.23,332 கோடியாக இருந்தது. ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட புதிய எஸ்ஐபிகளின் எண்ணிக்கை 72,61,928 ஆக உள்ளது. ஜூன் மாதத்தில் 8,98,66,962 ஆக இருந்த மொத்த எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை ஜூலையில் 9,33,96,174 ஆக இருந்தது.
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (ஏஎம்எஃப்ஐ) என்பது இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கானஇலாப நோக்கற்ற (NGO) அமைப்பாகும். 1995 இல் நிறுவப்பட்ட AMFI, பரஸ்பர நிதித் துறையின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) மேற்பார்வையின் கீழ் செயல்படுகிறது.
டீமேட் கணக்கு (Demat Account)
இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, பங்குகளை வாங்க அல்லது விற்க, ஒரு Demat (Dematerialized) கணக்கு அவசியமாக இருக்கிறது. Demat கணக்கு பங்குகளை டிஜிட்டல் வடிவில் சேமிக்க மற்றும் பரிமாற்றம் செய்ய உதவுகிறது, இது பங்கு பரிமாற்றங்களை எளிதாக்கும்.
இந்த நிதியாண்டில் மட்டும் (2024-2025) ஒவ்வொரு மாதமும் சராசரியாக 34 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம் நிலவரப்படி, இந்தியாவின் மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 16.2 கோடியாக உயர்ந்துள்ளது என Motilal Oswal எனும் நிதிச் சேவை நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
வங்கி சேமிப்பு நன்மைகள் :
- வங்கிகளில் உங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாள்கிறார்கள்.
- குறைந்த அளவிலான நிச்சயமான வட்டி விகிதம் கிடைக்கும்.
- வங்கி நகல்களை எளிதாகப் பெறலாம் மற்றும் கணக்கில் பணத்தை எப்போதும் சென்று பார்க்கலாம்.
- வங்கி சேமிப்பு கணக்குகளில், fixed deposits (FDs) மற்றும் recurring deposits (RDs) போன்றவற்றில் முதலீட்டு செய்து, வட்டி வருமானம் பெற முடியும்.
பங்குச் சந்தை முதலீடு நன்மைகள் :
- சரியான பங்குகளை தேர்ந்தெடுத்தால், முதலீட்டின் மதிப்பு அதிகரிக்கக் கூடும்.
- பங்குகள் அதிக அளவிலான வருமானத்தை வழங்க முடியும், குறிப்பாக நீண்ட கால முதலீட்டில் பங்குகள் வாங்கினால், முதலீட்டின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- நியாயமான பங்குகளை வாங்குவதன் மூலம், உயர் இலாபம் கிடைக்கலாம்.
- பங்குகளைப் பொறுத்தவரை, நீண்ட கால முதலீட்டில், உயர் வருமானத்தைப் பெறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
வங்கி சேமிப்பு vs பங்குச் சந்தை முதலீடு எது சிறந்தது?
வாங்கி : நீங்கள் பாதுகாப்பான முதலீட்டை விரும்பினால், வங்கி சேமிப்பு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
முதலீட்டுத் திட்டம் : உயர்ந்த வருமானம் பெற விரும்பினாலோ அல்லது ஆபத்தை சமாளிக்ககூடிய திறமையானவராக இருந்தால், பங்குச் சந்தை முதலீட்டை தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்பு : இதில், எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது உங்கள் நிதி நோக்குகள், உங்களின் வசதிகள் அடிப்படையில், நீங்கள் எது உங்களுக்கு பொருந்துமென்று முடிவு செய்ய வேண்டும்.