வணிகம்

நாள் முடிவில் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்.! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி.!

Published by
செந்தில்குமார்

இந்திய பொருளாதாரம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. இதில் சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 200 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமானது.

வங்கி, நிதி மற்றும் உலோகப் பங்குகளின் பலவீனம், தடையற்ற வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போரும் பங்குச்சந்தை சரிவிற்கு காரணமாக உள்ளது.

முதலீட்டாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றமடைந்து வர்த்தகத்தைத் தொடங்கியது. அதன்படி, காலை 9.30 மணிக்குப் பிறகு சென்செக்ஸ் 525.75 புள்ளிகள் உயர்ந்து 64,117.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 140.05 புள்ளிகள் உயர்ந்து 19,129.20 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வந்தது.

தற்போது வர்த்தக நாள் முடிவடைந்த நிலையில், சென்செக்ஸ் 489.57 புள்ளிகள் உயர்ந்து, 64,080.90 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, நிஃப்டி 144.10 புள்ளிகள் உயர்ந்து 19,133.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 63,591.33  புள்ளிகளாவும், நிஃப்டி 18,989.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.0100 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 87.42 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 10 அல்லது 0.15% குறைந்து ரூ.6,772 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 2 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் உள்ளது. இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

4 minutes ago

KKR vs SRH : மிரட்டல் பந்துவீச்சு., கொல்கத்தா அபார வெற்றி! SRH ‘ஆல் அவுட்’ படுதோல்வி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

7 hours ago

சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…

8 hours ago

KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…

9 hours ago

அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…

10 hours ago

“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!

மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…

10 hours ago