வணிகம்

இனி தங்கமே வாங்க முடியாது போலயே! ஒரே நாளில் ரூ.520 உயர்வு…

Published by
கெளதம்

கடந்த 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.44,480க்கு விற்பனை ஆன ஒரு சவரன் தங்கம், 10 நாட்களில் ரூ.1,160 உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் ரூ.46,000-ஐ கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

(28.10.2023) இன்றைய நிலவரப்படி,  சென்னையில் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வந்த 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,770க்கும் விற்பனையாகிறது. ஆனால், விலையில் மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,500க்கும் விற்பனையாகிறது.

(27.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.45,640க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,705 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூ.77.50ஆகவும், கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Published by
கெளதம்

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ரெடி… இன்று மதியம் அறிவிக்கும் பிசிசிஐ!

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…

52 minutes ago

LIVE: பரந்தூர் செல்லும் விஜய் முதல்… நூல்களை வெளியிடும் முதலமைச்சர் வரை.!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

பரந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்… காவல்துறை அனுமதி!

சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

2 hours ago

ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…

2 hours ago

ஹமாஸுடன் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.! எப்போது அமல்?

இஸ்ரேல்:  ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…

2 hours ago

சர்வதேச புத்தகத் திருவிழா: 30 நூல்களை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…

3 hours ago