15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த ஆந்திரா வங்கி!
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் தொடர்புடைய ஊழல் விசாரணையால் அவ்வங்கியின் பங்குகள் சந்தித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியின் இயக்குநராக இருந்த அனுப் கார்க், Sterling Biotech எனும் தனியார் நிறுவனத்திற்கு மோசடியான ஆவணங்களின் பேரில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கடன் தொகை வாராக்கடனாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வங்கியின் இயக்குநர் அனுப் கார்க் மீது கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்தது. இதனையடுத்து வாரத்தின் முதல் நாளில் ஆந்திரா வங்கியின் பங்குகள் 10 விழுக்காடு வரை சரிவை சந்தித்தன.
மேலும் செய்திகளுக்க் தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.