அம்பானி நினைத்தால் இந்திய அரசை நடத்தமுடியும் ?உலக பணக்காரர்களை மிஞ்சிய அம்பானி …..

Default Image

பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று இந்திய அரசை 20 நாட்களுக்கு முகேஷ் அம்பானியால் மட்டுமே நடத்த முடியும் என  தெரிவித்துள்ளது.

2018 ராபின் ஹூட் இன்டக்ஸ் (2018 Robin Hood Index) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் முன்னணிப் பணக்காரர்கள் அந்தந்த நாட்டின் அரசுகளை எத்தனை நாட்களுக்கு நடத்த முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவன அதிபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos), அந்த நாட்டின் அரசை 5 நாட்கள் மட்டுமே நடத்த முடியும் எனத் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தின் பணக்காரர் ஹூக் கிராஸ்வேனரும், ஜெர்மனியின் பணக்காரரான டயட்டர் ஸ்குவார்ஸூம் அவரவர் நாடுகளின் அரசை 5 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அலிபாபா நிறுவனத்தின் அதிபரான சீனாவின் ஜாக் மா(Jack Ma) அந்த நாட்டின் அரசை 4 நாட்களுக்கு மட்டுமே நடத்த முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ஜான் பிரெட்ரிக்சன் என்ற பணக்காரர் அந்த நாட்டு அரசை 441 நாட்கள் நடத்த முடியும் என்றும், ஹாங்காங்கைச் சேர்ந்த பணக்காரர் லி – கா ஷிங் அந்த நாட்டு அரசை 191 நாட்களுக்கு நடத்திச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்