ரிங் நிறுவனத்தினை வாங்குகிறது அமேசான்
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டா டோர் பெல்லினை ரிங் என்னும் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது.
இந்த பெல் ஆனது ஒருவர் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வெளியே இருக்கும்போதோ வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த பெல்லினை உருவாக்கிய ரிங் நிறுவனம் தற்போது தனது முதலீட்டினை 209 மில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தினை வாங்குவதற்கு அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்காக 1 பில்லியன் டாலர்கள் பேரம் பேசப்பட்டுள்ளது
கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் டோர் பெல் சாதனமானது அமேசானின் அலெக்ஸா சாதனத்துடன் இணைந்து செயல்படும் என தெரிகிறது.