ஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக கோடி ரூபாய் அபராதம் !
ஏர்டெல் வங்கிக்கு விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக அவர்களின் ஆதார் எண்ணைப் பெற்றபோது, அவர்களின் ஒப்புதல் இன்றியே ஏர்டெல் வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வாறு கணக்குத் தொடங்கியதும் 23லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்கில் எரிவாயு சிலிண்டர் மானியத் தொகை 47கோடி ரூபாயை வரவு வைத்தது, வங்கிக்கான விதிமுறைகளை மீறிய செயலாகும். இதற்காக ஏர்டெல் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.