விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
நஷ்டத்திலும், கடனிலும் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை 4 பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா சாட்ஸ் ஆகியவை ஒரு பிரிவாகவும் தரைக்கட்டுப்பாட்டு மையம், பொறியியல் பிரிவுகள், அலையன்ஸ் ஏர் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்தும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பது தொடர்பான அறிவிப்பு இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இண்டிகோ நிறுவனம் ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கப்போவது யார் எனத் தெரிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…