விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் அறிவிப்பு!
தற்போதைய சூழலில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு மேற்கொண்ட முடிவின் அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார். போக்குவரத்து விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கசிந்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சின்ஹா, நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் நிறைவேற்றப்பட்ட அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும், முழுமையான அறிக்கை வெளியாகும் பட்சத்தில் அது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
பங்கு விற்பனை நடைமுறைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 6 முதல் 8 மாதங்களுக்குள் பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தான் நம்புவதாகவும் மனோஜ்சின்ஹா குறிப்பிட்டார்.
source: dinasuvadu.com