90,000 கோடியை இழந்த அதானி குழுமம்.! பங்குச்சந்தையில் கடும் சரிவு.!
Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!
இதனால், அதானி குழுமத்தின் மோசமான நாளாக இன்று மாறியுள்ளது. அதாவது, இன்றைய வர்த்தகத்தில் அதிக இழப்பை சந்தித்த குழுமமாக அதானி குழு இருக்கிறது. அதில் குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி அதிக நஷ்டத்தை கண்டுள்ளது. ஏனெனில், அதானி கிரீன் எனர்ஜி தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி-இல் ஒரு பங்கு 13 சதவீதம் குறைந்து ரூ.1,650ஆக வர்த்தகமானதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More – பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. ஒருவர் கைது.!
நடப்பாண்டு இதுவரை அதானி க்ரீன் எனர்ஜியின் பங்குகள் கண்ட ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாக பார்க்கப்படுகிறது. இதுபோன்று, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் & எஸ்இஇசட் ஆகியவை முறையே 5.5 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
அதேசமயம், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி மற்றும் அதானி வில்மர் ஆகியவை 4 முதல் 7 சதவீதம் வரை சரிந்தன. இதில், அதானி எண்டர்பிரைசஸின் 7வது நாளான சரிவு இதுவாகும். 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ.1,573 இல் இருந்து கிட்டத்தட்ட 100% அதிகமாக வர்த்தகமானது.
Read More – சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது… அரவிந்த் கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு!
எனவே, இன்றைய வர்த்தகத்தில், அதானி குழுமம் பங்குகள் கடும் சரிவை கண்ட நிலையில், அதன் சந்தை மூலதனத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.90,000 கோடியை இழந்துள்ளன. நேற்றைய நிலவரப்படி, அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான 5.7% கிட்டத்தட்ட ரூ.15.85 லட்சம் கோடியாக இருந்தது.