பொதுமக்களுக்கு அதிர்ச்சி..குறையும் கச்சா எண்ணெய் உற்பத்தி..! பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு..!

Published by
செந்தில்குமார்

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு) நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 70 டாலர் (ரூ.5,757) என விற்பனை செய்யப்பட்ட ஒரு பீப்பாய் (பேரல்) கச்சா எண்ணெய் விலை 6% வரை உயர்ந்து தற்போது 80 டாலரை (ரூ.6,623) கடந்துள்ளது.

சவூதி அரேபியா, ஈராக் மற்றும் பல வளைகுடா நாடுகள் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாகக் கூறியதை அடுத்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியா ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் மற்றும் ஈராக் 2.1 லட்சம் பீப்பாய்கள் வரை உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் குறைத்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த 10 மாதங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

ஜல்லிக்கட்டு 2025 : மாடு பிடி வீரர் கார்த்திக் தகுதி நீக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…

15 minutes ago

தெலுங்கானா விபத்து : லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!

தெலுங்கானா :  மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…

42 minutes ago

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

1 hour ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

1 hour ago

பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்

டெல்லி  : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025  கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…

2 hours ago

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த…” விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…

2 hours ago