gold rate today [Image Source : File Image]
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ரூ.47,000ஐ எட்டியதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று (23. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.47,000க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,875க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ரூ. 80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.80,500க்கும் விற்பனையாகிறது.
சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் நேற்று (22. 12. 2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 46,880 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,860-க்கு விற்பனையானது. அதேவேளை, வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.81,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…