தொடர் சரிவை காணும் தங்கம் விலை.. இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு!

GOLD PRICE

தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று அறிவித்த பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இது நகை வாங்கும் இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு என்றே சொல்லலாம்.

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டுள்ளது, கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.3,160 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (26-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (25-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும் விற்பனையானது. அதே போல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.89க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்