2016 ஏப்ரலுக்கு முன்னர் வீட்டுக் கடன் வாங்கியவர்களா நீங்கள் ?உங்களுக்கு ஓர் இனிய செய்தி ….

Default Image

வட்டி விகிதம், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால், 2016 ஏப்ரலுக்கு முன்னர் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு  குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

வங்கிகள் கடன்வட்டி விகிதத்தை தீர்மானிக்க பேஸ் ரேட் எனப்படும் அடிப்படை விகித முறையைப் பயன்படுத்தி வந்தன. இதன்படி ஒவ்வொரு வங்கியும் குறைந்தபட்ச வட்டி விகிதத்தை தீர்மானிக்க தனித்தனி முறைகளை பயன்படுத்தி வந்தன. வங்கிகள் தன்னிச்சையாக வட்டி விகிதத்தை தீர்மானிப்பதால், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் அதைப் பின்பற்றி வட்டி விகிதத்தை குறைப்பதில்லை என புகார்கள் எழுந்தன.

இதையடுத்து ரிசர்வ் வங்கியானது எம்சிஎல்ஆர் (MCLR) என்ற புதிய முறையை 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தியது. இதன்படி 2016 ஏப்ரலுக்கு பின்னர் வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு எம்சிஎல்ஆர் முறைப்படி வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக கடன்பெற்றவர்களுக்கு பழைய பேஸ் ரேட் முறையே பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் ஏப்ரல் முதல் முழுமையாக எம்சிஎல்ஆர் முறையையே வங்கிகள் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்