உணவு டெலிவரி தள போட்டியில் ONDC.! சோமாட்டோ, ஸ்விகிக்கு புதிய மாற்று.?

Published by
செந்தில்குமார்

உணவு டெலிவரி ஆப்களுக்கு மாற்றாக ONDC எனும் புதிய தளம் ஒன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகளானது தற்போது மிகவும் அதிகமாகி கொண்டு வருகிறது. இந்த உணவு டெலிவரி வணிக போட்டியில் சோமட்டோ (Zomato) மற்றும் ஸ்விகி (Swiggy) இரண்டும் முன்னணி வரிசையில் இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த ஆப்கள் மூலம் உணவகத்தில் இருந்து பயனாளர்கள் வீட்டிற்கு குறுகிய நேரத்தில் உணவை வழங்கி வருகின்றன. இருந்தும், தற்போது அந்த ஆப் நிறுவனங்கள் செயலி பராமரிப்பு கட்டணம் என குறிப்பிட்ட தொகையை பயனர்களிடம் வசூல் செய்வது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தற்போது இந்த உணவு டெலிவரி சந்தையை மையப்படுத்தி, ONDC (Open Network for Digital Commerce) எனும் புதிய திறந்த நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளமானது, வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களைக் குறைத்து நேரடியாக பயனர்கள் உணவகத்தை நாடும் நிலை ஏற்படுத்தி தரப்படும்.

இந்த சேவையானது தற்போது முதற்கட்டமாக பெங்களூரு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது . மேலும் ONDC ஆனது வணிகர்ளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

ONDC என்பது ஒரு செயலி அல்ல. இது வாடிக்கையாளர்களுடன் வணிகங்களை இணைக்க, டிஜிட்டல் மயமாக்க உதவும் சேவை ஆகும். ONDC தளத்தின் மூலம் பயனர்கள் பட்டியலிடப்பட்டுள்ள வணிகர்களிடம் இருந்து உணவு மட்டுமல்ல, பிற பொருட்களையும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…

1 minute ago

“அந்தர் பல்டி திமுக!  நீட் ரெட்டை வேடம், கடனில் முதலிடம்” புட்டு புட்டு வைத்த இபிஎஸ்!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…

41 minutes ago

ரசிகர்களுக்கு ‘பிளையிங் கிஸ்’ கொடுத்த அஜித்! பரபரக்கும் துபாய் ரேஸ் களம்…

துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…

2 hours ago

8 வயது சிறுமிக்கு மாரடைப்பு? பதைபதைக்க வைத்த கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள்…

குஜராத் :  நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…

2 hours ago

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

3 hours ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

4 hours ago