அமேசானுக்கு ஆப்பு வைத்து ப்ளிப்கார்ட்டை பிழிந்து எடுக்க வரும் இந்திய நிறுவனம்…!!!! நீயா ? நானா ? வெல்லப்போவது யார் ?..!!!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்திய நிறுவனம் சொந்தமாக ஆன்லைன் வலைதளம் ஒன்றை தற்போது துவங்க இருக்கிறது.இந்த புதிய வலைதளம் இந்தியாவில் அமேசான் மற்றும் ஆகிய வலைதளங்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஜியோ டெலிகாம் சேவை, மொபைல் சாதனங்கள் மற்றும் ரீடெயில் வர்த்தக நெட்வொர்க் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து உலகின் முன்னணி ஆன்லைன் வலைதளங்களை எதிர்கொள்ள முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளர்.
ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஒன்றிணைந்து பிரத்யேகமாக புதிய ஆன்லைன் வலைதளத்தை துவங்கியுள்ளது.
இந்நிறுவனம் குஜராத்தில் இருக்கும் சுமார் 12 லட்சம் சிறு வணிகர்களை ஊக்குவிக்க இருப்பதாக நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் வியாபாரிகளை சேர்க்க ஜியோவின் செயலிகள் மற்றும் சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று ரிலையன்ஸ் ரீடெயில் மூத்த அதிகாரியான வி. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக தளங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பொருட்களை பிரத்யேகமாக விற்பனை செய்யவோ, சிறப்பு சலுகைகள் வழங்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த விதிமுறைகள் மூலம் அமேசான் மற்றும் வால்மார்ட் கைப்பற்றியிருக்கும் ப்ளிப்கார்ட் நிறுவன வியாபாரங்களை வெகுவாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அந்நிய நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய நிறுவனங்கள் வர்த்தகத்தை மீட்டெடுக்குமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
DINASUVADU.