ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.! பங்குச்சந்தைக்கும் விடுமுறை.!
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி திங்களன்று கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishthaa) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்திர பிரதேச மாநில அரசு வெகு பிரமாண்டமாக செய்து வருகிறது. இந்த விழாவுவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..?
ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கூட அரைநாள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதே போல மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவை அரைநாள் விடுமுறை என அறிவித்துள்ளன.
தற்போது ரிசர்வ் வங்கியும் பங்குச்சந்தைக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது. வரும் திங்களன்று பங்குசந்தையானது பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும் என அறிவித்துள்ளது . வழக்கமாக காலை 9.30க்கு பங்குச்சந்தை துவங்கிவிடும்.
இதனை ஈடுகட்டும் விதத்தில் இன்று (சனிக்கிழமை) பங்குசந்தை இயங்குகிறது. ஆனால் இன்று காலை 9.30க்கு தொடங்கிய பங்குசந்தையானது பிற்பகல் 3.30 மணிக்கு வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்று குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகள் அதாவது, நிலுவை பரிவர்த்தனைகள் இன்று நடைபெறாது என்றும் இந்த பரிவர்த்தனைகள் நாளை மறுநாள் 22ஆம் தேதி தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.