542 மில்லியன் டாலர் மதிப்பில் குறைந்த எடை கொண்ட பீரங்கி…!இந்திய ராணுவத்திற்காக பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் …!
பிரிட்டிஷ் நிறுவனமான BAE SYSTEMS இடமிருந்து குறைந்த எடை கொண்ட பீரங்கிகள் வாங்க வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் 10வது ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நிறுவனங்களுடன் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் நிறுவனமான BAE SYSTEMS இடமிருந்து, உலகிலேயே மிக குறைந்த அளவு எடை கொண்ட அதிநவீனமான 145 பீரங்கிகளை இந்திய ராணுவத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. M777 155MM ULTRA LIGHT WEIGHT HOWITZER என்ற பீரங்கியானது அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
முதல் 25 பீரங்கிகள் பிரிட்டிஷ் நிறுவனம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். மீதமுள்ள 120 பீரங்கிகள் இந்திய நிறுவனமான மஹேந்திரா டிபென்சில் இருந்து தயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.
பழைய பீரங்கிகள் 12,000 கிலோ எடை இருக்கும் நிலையில், இந்த வகை பீரங்கி 4,200 கிலோ எடை கொண்டது. உலகிலேயே மிகவும் எடை குறைவான இந்த பீரங்கியை விமானம் மூலம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்தது. மேலும் இதைவிட குறைவான எடையுடன் 65கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பீரங்கிகளை உருவாக்க பனிகள் நடைபெற்று வருவதாகவும், அது பயன்பாட்டிற்கு வருவதற்கு மேலும் சில காலம் ஆகலாம் என்றும் BAE SYSTEMS நிறுவனத்தின் துணை தலைவர் Amitabh bagat கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.