மத்திய நிதியமைச்சர் தலைமையில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.! தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு.!
49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இதில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த கூட்டத்தில் தலைவராக மத்திய நிதியமைச்சர் இருப்பார். தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்ட தலைவராக நிர்மலா சீதாராமன் இருக்கிறார்.
49வது ஆலோசனை கூட்டம் : இந்த ஆலோசனை கூட்டம் மூலம் எட்டப்படும் முடிவுகள் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். முக்கிய வரி விவரங்கள், வரி சலுகையை என பல்வேறு நிதிநிலை பற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இந்த குழுவால் அரசுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்கமுடியும். இன்று இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 49வது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
பழனிவேல் தியாகராஜன் : காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்ப்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டுள்ளார். இதில் பான் மசாலா, குட்கா, ஆன்லைன் சூதாட்டம், கேசினோகள் உள்ளிட்டவைகளுக்கு வரி ஏற்றம் குறித்தும், சிறுதானிய உணவு பொருட்களுக்கு வரி குறைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.