40 சதவிதம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!2.8 கோடி டன் பெட்ரோலியம் பொருட்களை உற்பத்தி செய்து சாதனை!
40 விழுக்காடு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் காலாண்டு லாபம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனத்தின் லாபம் 5 ஆயிரத்து 218 கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 3 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்திருந்தது. காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதலும் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
2 கோடியே 80 லட்சம் டன் பெட்ரோலியம் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, இதனையடுத்து பங்கு முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்டுகள் எனப்படும் லாப பங்குகளை வழங்கவும் இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கப்பட்டு வருவதால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.