நீரவ் மோடி மீது மூன்றாவது முதல் தகவல் அறிக்கை!
தொழிலதிபர் நீரவ் மோடி மீது பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து, 322 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக மூன்றாவது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் உத்தரவாதத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நீரவ் மோடியின் நிறுவனங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 4ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கில், நீரவ் மோடியின் நிறுவனத்தை சேர்ந்த உயரதிகாரிகள் விபுல் அம்பானி மற்றும் ரவிசங்கர் குப்தா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வங்கி அதிகாரிகள் உட்பட 18 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.