34 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு கொடுக்க நிதி அயோக் பரிந்துரை
நஷ்டத்தில் இயங்கும் 34 பொதுத்துறை நிருவனங்களை தனியாருக்கு விற்க நிதி அயோக் பரிந்துரை செய்துள்ளது.
கிரைஸில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பேசும்போது நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் இதனைக் தெரிவித்தார். இந்த மாநாடு உள்கட்டமைப்பு சார்ந்து அமைக்கப்பட்டது.
அவர் மேலும் கூறுகையில்: நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு கருத்து கேட்கப்பட்டது. இதனையடுத்து நிதி ஆயோக் சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.
குறிப்பாக நட்டத்தில் இயங்கி வரும் 34 பொதுத்துறை நிறுவனங்களை உத்திசார்ந்து விற்பனை செய்யும்படி பரிந்துரை செய்யப்பட்டது என்றார். நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலகல் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.72,000 கோடி திரட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.