கூட்டுறவு வங்கியில் புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனையை அடுத்த மதகடிப்பட்டில் திருபுவனை விவசாயிகள் கூட்டுறவு சங்க வங்கி உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளனர். மேலும் தங்களது நகைகளை அடமானமாக வைத்து நகைக்கடனும் பெற்றுள்ளனர். நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் வங்கி பூட்டப்பட்டிருந்தது. வங்கிக்கு இரவில் காவலாளி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகையினை கொள்ளையடித்துச் சென்றனர். காலையில் வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அருகிலிருந்தோர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
வங்கியில் கொள்ளையடித்த நபர்கள், அருகிலுள்ள மளிகைக்கடை, பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 5 இடங்களிலும் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கைவரிசை காட்டிய கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா அல்லது வங்கி ஊழியர்களே கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…