(28.11.2023) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
வாரத்தின் தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நேற்றைய விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.25 உயர்ந்திருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதி ரூ.44,800க்கு விற்கப்பட்ட தங்கம் 15 நாட்களில் ரூ.1,440 உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வருகிறது டிசம்பர்.! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.!
சென்னையில் (28.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,240க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,780க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.81.50க்கும், கிலோ வெள்ளி ரூ.81.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.