2,60,000 கோடி கிரிப்டோ கரன்சி பில்லியனர் சாம் பேங்க்மன் பிரைட், ஒரே வாரத்தில் வங்கி திவாலாகி டெபாசிட் இழந்துள்ளார்.
எஃப்.டி.எக்ஸ். கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் பேங்க்மன் பிரைட், $10 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.81,218கோடி) வாடிக்கையாளர் நிதியை, தனது ஹெட்ஜ் நிதியான அலமேடா ஆராய்ச்சிக்கு தவறான முறையில் மாற்றியுள்ளார், இதுவே அவரது பெரும் வீழ்ச்சிக்கு காரணம் என்று பலர் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ஜ் நிறுவனமான எஃப்.டி.எக்ஸ்(FTX) தற்போது வங்கி திவாலாகி, கிரிப்டோ உலகில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. சாம் பேங்க்மன் பிரைட், இது குறித்து பேசும்போது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு இவ்வாறு தான் செய்ததாகவும், இதன் விளைவு பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வங்கி திவாலாகி அதன்பின் அடுத்த 3 நாட்களுக்குள் வர்த்தகர்கள் தங்களது பணத்தை எல்லாம் வர்த்தகத்திலிருந்து எடுத்துவிட்டனர், இதனால் எஃப்.டி.எக்ஸ்(FTX) நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்தது.
அலமேடா மற்றும் எஃப்.டி.எக்ஸ்(FTX) இடையேயான உறவு, பேங்க்மேன்-ஃபிரைடின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளது. 2017இல் வர்த்தகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு 2019இல் எஃப்.டி.எக்ஸ்(FTX) நிறுவனத்தை பேங்க்மேன்-ஃபிரைட் தொடங்கினார்.
விரைவில் நிறுவனம் பிட்காயின் சந்தையில் மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்தது. மேலும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் டிஜிட்டல் சொத்துக்களை வாங்க, விற்க மற்றும் சேமிப்பதற்கான சந்தையாக எஃப்.டி.எக்ஸ் ஐ உருவாக்கினார்.
அலமேடாவை எலிசன் இயக்கினார், ஆனால் பேங்க்மேன்-ஃபிரைடும் அதில் பங்குவகித்தார். அலமேடா எஃப்.டி.எக்ஸ் பிளாட்ஃபார்மில் பெரிதும் வர்த்தகம் செய்தது, அதாவது எஃப்.டி.எக்ஸ் இன் மற்ற வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தபோது அலமேடா சில சமயங்களில் பயனடைந்தது.
மேலும் பேங்க்மேன்-ஃபிரைட் அதிக ரிஸ்க் கான வர்த்தகத்தில் ஈடுபட்டார், அது அமெரிக்க சட்டத்தையும் மீறிய வர்த்தகமாகும். இதுதான் மிகப்பெரிய கிரிப்டோ இழப்புக்கு காரணமாக அமைந்தது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…