2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்!ரூ.5000 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்பு! ரூ.250 கோடி இழப்பு ..!
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகின்றது.
டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த, சுங்கச்சாவடி 3ஆம் நபர் காப்பீடு கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்தியா முழுவதும் சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும்,தமிழகத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறுகையில், தமிழகத்தில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5000 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.