பிரபல ஸ்போர்ட்ஸ் ஷூ, ஆடைகள் , காலணிகள், விளையாட்டு உபகாரணங்களை தயாரிக்கும் நிறுவனமான நைக் (Nike) தங்கள் நிறுவனத்தின் கடந்த கால நிதி நிலைமை ஓப்பீடுகளை கவனத்தில் கொண்டு செலவீனங்களை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
கடந்த வருடம் மே 31 வரையிலான காலகட்டத்தில் Nike நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 83,700 பேர் ஆகும். அவர்களில் 2 சதவீதம் பேர் அல்லது சுமார் 1,600 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப நைக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக Nike தலைமை நிர்வாகி ஜான் டொனாஹோ தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி – நேபாள ராஸ்ட்ரா வங்கி இடையே UPI-NPI இணைப்புக்கு ஒப்பந்தம்
மேலும் அவர் கூறுகையில் , இந்த அறிவிப்பு ஒரு வேதனையான உண்மை. இதனை நாங்கள் எளிதாக கடந்த செல்ல முடியவில்லை. எங்களால் தற்போது சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த முடிவுக்கு முழுக்க எனது தலைமையின் கீழ் நான் பொறுப்பேற்கிறேன். தற்போது நாங்கள் சந்தையில் போட்டியிடுவதற்கு அதிக கவனம் செலுத்த உள்ளோம். சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.சில முடிவுகளில் திருத்தமும், மாற்றமும் மற்றும் சில முடிவுகளில் இருந்து விலகவும் வேண்டியுள்ளது என ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி வருத்தத்துடன் கூறினார்.
NIke நிறுவனம் தற்போது தங்கள் செலவினங்களில் அதிக கவனமுடன் செயல்பட உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் கணிசமான அளவில் குறைந்தது. நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 1 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியிலும் பெரிய அளவிலான மாற்றம் நிகழவில்லை. இதனால் அதிக தள்ளுபடி கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அது நிறுவனத்திற்கு மேலும் இழப்பை ஏற்படுத்தியது. மேலும் Nike நிறுவனத்தின் வியாபார சந்தைகளில் முக்கிய தளமான வட அமெரிக்காவிலும் வீழ்ச்சியை சந்தித்தது.
இதன் காரணமாக இத ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்டுகிறது. ஆட்குறைப்பு, செலவீனங்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரையில் செலவைக் குறைக்கலாம் என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு என்பது, அதிகாரபூர்வ நேரடி விற்பனை கடைகள் மற்றும் விநியோக மையங்களில் உள்ள ஊழியர்களையோ அல்லது ஆய்வு குழுவில் உள்ளவர்களையோ பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…