1500 கோடி ஈரோக்களாக இந்தியா – பிரான்ஸ் வர்த்தகத்தை உயர்த்த இலக்கு!இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
இந்தியா – பிரான்ஸ் நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் 1500 கோடி ஈரோக்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4 நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் இரு நாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் வசிக்கும் விடுதிக்கு சென்ற சுஷ்மா, பின்னர் இந்திய வம்சவழியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்திய தூதரகம் தயாரித்த இந்தியாவில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டார். அப்போது பேசிய சுஷ்மா ஸ்வராஜ், முதல் உலகப் போரில் பிரான்சுக்கு ஆதரவாக பங்கேற்ற ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களின் தியாகத்தை கவுரவிக்கும் விதமாக பாரீஸ் அருகே நினைவிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.