1 லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கலாம்..!குறைத்து விற்பதால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படாது..!பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு தகவல்
1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.40-க்கு மிகாமல் விற்கப்பட வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .
இதனிடையே கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியது.லிட்டருக்கு ரூ.85-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், “பெட்ரோல் விலையை குறைத்து விற்பதால் இந்திய பொருளாதாரம் ஒருபோதும் பாதிக்கப்படாது.அதேபோல் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.40-க்கு மிகாமல் விற்கப்பட வேண்டும்” என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.