வோடபோன்- ஐடியா இணைப்பு எதிரொலி…!19ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்த உத்தரவு …!தொலைத்தொடர்புத் துறை அதிரடி …!

Default Image

தொலைத்தொடர்புத் துறை , வோடபோன்(VODAFONE), ஐடியா நிறுவனங்களின் இணைப்புக்கு முன்பு 19ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஓடபோனும், மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியாவும் இணைந்து ஒரே நிறுவனமாக மாறத் திட்டமிட்டுள்ளன. அப்படி இணைந்தால் அது 41கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும்.

இந்நிலையில் இரு நிறுவனங்களும் உரிமக் கட்டணம், அலைக்கற்றைப் பயன்பாட்டுக் கட்டணம், ஒருமுறை அலைக்கற்றைக் கட்டணம் ஆகிய வகைகளில் தொலைத்தொடர்புத் துறைக்கு 19ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. அந்த நிலுவையைச் செலுத்திவிட்டு இணைப்பை மேற்கொள்ளுமாறு இருநிறுவனங்களையும் தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்