வைரவியாபாரி நீரவ் மோடியின் இங்கிலாந்து சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை…!சிபிஐ தீவிரம்…!
சிபிஐ தீவிரமாக வைரவியாபாரி நீரவ் மோடியின் இங்கிலாந்து கணக்கை முடக்கும் வேலையில் செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் நீரவ் மோடியைப் பிடிக்க சிபிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் அவரது சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள பார்கிளே வங்கியில் பவுண்டுகளாக இந்திய மதிப்பில் 12 கோடி ரூபாய் கணக்கு வைத்திருப்பதும், டாலர்களாக 80 ஆயிரம் ரூபாய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். ஆர். தம்போலி இரு கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து வங்கிக்கு மனு அளிக்க அனுமதித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.