4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது, பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 68 ரூபாய் 24 காசுகளுக்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் மீதான கலால் வரி 11 ரூபாய் 77 பைசாவும், டீசல் மீதான கலால் வரி 13 ரூபாய் 47 பைசாவும் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கிய நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கலால் வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…