மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மாநிலங்களவையில் பணிக்கொடையில் வரிவிலக்குக்கான உச்சவரம்பை 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்கவார் அறிமுகப்படுத்திய இம்மசோதா விவாதங்களின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக்காலத்தை அதிகபட்சமாக 26 வாரங்கள் வரை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.