லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க உத்தரவு!லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்து விட்டு தொழிலதிபர் விஜய் ,மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார்.
இதனால் இந்திய பல முறை இங்கிலாந்திடம் முறையிட்டது.அதேபோல் இன்டர்போலிடமும் இந்திய அமலாகத்துறை உதவி கேட்டது.இதன் பின்னர் இன்டர்போல் விஜய் மல்லையா உட்பட மூன்று பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கிகடன் கடன் மோசடியில் சிக்கி வெளிநாட்டிலுள்ள தொழிலதிபர் விஜய்மல்லையாவின் ரூ.12,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்ற லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.