ரொடோமேக் நிறுவனத்தின் ரூ.177 கோடி சொத்துகள் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முடக்கம்!
ரொடோமேக் பேனா நிறுவனத்தின் 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 2,919 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மனைவி சாத்னா கோத்தாரி ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தற்போது அந்த நிறுவனம் மற்றும் இயக்குனர்களுக்கு சொந்தமாக உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.